ADDED : ஜன 30, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார், அம்பத்துார், வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன், 61. இவர், ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவில், கடந்தாண்டு ஜூலை மாதம், பணம் மோசடி குறித்து புகார் செய்தார்.
அதில், '2022, ஜூலையில் கோடம்பாக்கம், பாளைக்காரன் தெருவைச் சேர்ந்த ராமசாமி, 64, என்பவர், அவரது வீடு விற்பது குறித்து என்னிடம் தெரிவித்தார். அந்த வீட்டை, 1.50 கோடி ரூபாய்க்கு வாங்க பேசி முடித்து, மொத்த பணத்தையும் கொடுத்தேன்.
'ஆனால் அவர், வீட்டை பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் ஏமாற்றினார்; பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.
இப்புகாரை விசாரித்த போலீசார், திருவான்மியூர், ராதா கிருஷ்ணன் தெருவில் பதுங்கியிருந்த ராமசாமியை நேற்று கைது செய்தனர்.