ADDED : ஜூன் 05, 2025 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, கொளத்துாரைச் சேர்ந்த பார்த்தசாரதி, 65, என்பவருக்கு சொந்தமான 1.50 கோடி ரூபாய் மதிப்பு 2,400 சதுர அடி நிலம், சூரப்பட்டில் உள்ளது.
இதில் வீடு, கடைகள் கட்டப்பட்டிருந்ததை அறிந்த பார்த்தசாரதி, நிலத்தின் மீதான வில்லங்க சான்று பார்த்தபோது, பக்தவத்சலம் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து, ராஜேஷ், நடராஜ் ஆகியோருக்கு விற்பனை செய்தது தெரிந்தது.
இது குறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், ராணிப்பேட்டையை பதுங்கியிருந்த பக்தவத்சலம், 54, என்பவரை கைது செய்து செய்தனர்.

