/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆன்லைனில் இழந்த ரூ.1.63 கோடி ஒப்படைப்பு
/
ஆன்லைனில் இழந்த ரூ.1.63 கோடி ஒப்படைப்பு
ADDED : செப் 05, 2025 02:20 AM
சென்னை:சைபர் குற்றவாளிகள், 'ஆன்லைன்' மூலம், பண மோசடி செய்து வருகின்றனர். இவர்களை, மாநில மற்றும் மாநகர அளவிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை மாநகர போலீசில் செயல்படும், மத்திய குற்றப்பிரிவு சைபர் காவல் நிலையம் மற்றும் மத்திய, மேற்கு, கிழக்கு, தெற்கு கிழக்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு போலீசார், 168 புகார்கள் மீது விசாரணை நடத்தினர்.
அவர்கள், சைபர் குற்றவாளிகளிடம் இருந்து, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 1.63 கோடி ரூபாயை மீட்டு பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஒப்படைத்து உள்ளனர்.
இந்த ஆண்டில், கடந்த எட்டு மாதங்களில், சைபர் குற்றவாளிகளிடம் இருந்து, 20.41 கோடி ரூபாயை மீட்டு, பாதிக்கப்பட்டோரிடம் ஒப்படைத்திருப்பதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித் தனர்.