ADDED : ஏப் 18, 2026 10:22 PM
அ நிறம் | அளவு
ஆவடி:ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், பெரியார் நகர் சாலையில், நேற்று மதியம் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர், 'ஹோண்டா ஆக்ட்டிவா' இருசக்கர வாகனத்தில், உரிய ஆவணங்களின்றி, 1.72 லட்சம் ரூபாய் பணம் எடுத்து சென்றது தெரிந்தது.
இதையடுத்து, பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்து, ஆவடி அரசு கருவூலத்தில் நேற்று ஒப்படைத்தனர்.
