/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.19 லட்சம் மோசடி: மாயமான பெண் கைது
/
ரூ.19 லட்சம் மோசடி: மாயமான பெண் கைது
ADDED : நவ 06, 2024 12:54 AM
சென்னை, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர், 27. இவர், 2018ல் வேலை தேடி, சென்னை, வடபழனியில் உள்ள 'ஏ.ஏ., மேன்பவர் சொல்யூஷன்' என்ற நிறுவனத்தை அணுகினார்.
அந்த நிறுவனத்தின் உரிமையாளர் லதிஷ்மேரி,45, என்பவர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், விமான நிலையம் ஆகியவற்றில் அதிகாரி வேலை வாங்கி தருவதாகவும், மலேசியாவில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி, சிறுக சிறுக 19 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், எந்த வேலையும் வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
பணத்தை ஷியாம் சுந்தர் திருப்பி கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து 2023ல், வடபழனி காவல் நிலையத்தில் ஷியாம் சுந்தர் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து லதிஷ் மேரி தலைமறைவாகிவிட்டார்.
அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று லதிஷ்மேரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.