தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரூ.19 லட்சம் மதிப்பு டாலர் கரன்சி பறிமுதல்

ரூ.19 லட்சம் மதிப்பு டாலர் கரன்சி பறிமுதல்

ரூ.19 லட்சம் மதிப்பு டாலர் கரன்சி பறிமுதல்


UPDATED : நவ 25, 2026 08:42 PM

ADDED : நவ 25, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 08:42 PM ADDED : நவ 25, 2026 08:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு செல்லும் தனியார் விமானத்தில் பயணியர் ஏறும் பகுதியில், தனியார் ஒப்பந்த ஊழியர் சுஹைப், 23, என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் பையுடன் நின்றிருந்தார்.

வார விடுமுறை நாளில் அவர் பணிக்கு வந்திருந்ததால், சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரது பையை சோதனையிட்டனர். அதில், இந்திய மதிப்பில் 19 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் கட்டுக்கட்டாக இருந்தன.

விசாரணையில், சுங்க சோதனையை தவிர்க்க, துபாய் செல்லும் பயணி ஒருவரிடம் விமானத்தில் ஏறும் இடத்தில், அப்பணத்தை ஒப்படைக்க அவர் காத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அவர் வைத்திருந்த பணம் பறிமுதல் செய்தனர். சுஹைப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us