/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தவறான பல்லை பிடுங்கிய டாக்டர் பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு
/
தவறான பல்லை பிடுங்கிய டாக்டர் பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு
தவறான பல்லை பிடுங்கிய டாக்டர் பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு
தவறான பல்லை பிடுங்கிய டாக்டர் பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு
ADDED : டிச 30, 2025 04:48 AM
சென்னை: தவறான பல்லை பிடுங்கிய மருத்துவர், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரும்பாக்கத்தைச் சேர்ந்த காயத்ரி என்பவர் தாக்கல் செய்த மனு:
அண்ணாநகர் 'ஆயிஸ்டர்' பல் பராமரிப்பு மையத்தில், பற்களை சீரமைக்க சென்றேன். கட்டணமாக 60,000 ரூபாய் செலுத்தினேன்.
சிகிச்சை அளித்த டாக்டர் சூசி கிறிஸ்டோபர் என்பவர், அகற்றவேண்டிய பால் பல்லுக்கு பதில், மற்றொரு பல்லை அகற்றினார். அவரது தவறான சிகிச்சையால், எனக்கு கடும் வலி, ரத்தப்போக்கு மற்றும் நரம்பு பாதிக்கப்பட்டது.
எனவே, மன உளைச்சலுக்கு 50 லட்சமும், உடல் சார்ந்த வலிக்கு 25 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை, சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன் மற்றும் டி.ஆர்.சிவகுமார் ஆகியோர் விசாரித்தனர்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
சிகிச்சை அளித்த டாக்டர் சூசி கிறிஸ்டோபர், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்பது நிரூபணமாகி உள்ளது. இதற்கு அவர் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவிற்காக 5,000 ரூபாயும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

