/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
7 கிராமங்கள் மேம்பாடுக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு
/
7 கிராமங்கள் மேம்பாடுக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு
ADDED : ஆக 29, 2025 10:24 PM
சென்னை :சென்னை புறநகரின் ஏழு கிராமங்களில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்காக, 21 கோடி ரூபாயை, சி.எம்.டி.ஏ., ஒதுக்கி உள்ளது.
சென்னை பெருநகரில் சில ஆண்டுகளாக, ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியில், சி.எம்.டி.ஏ., ஈடுபட்டு வருகிறது.
குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொளப்பாக்கம், கோவூர், கெருகம்பாக்கம், அயப்பன்தாங்கல், பரணிபுத்துார், மவுலிவாக்கம், தண்டலம் ஆகிய ஏழு கிராமங்களில்,
சாலைகள், பூங்காக்கள், சமுதாய கூடங்கள், மழை நீர் கால்வாய் போன்ற பணிகளை மேற்கொள்ள, 21 கோடி ரூபாயை, சி.எம்.டி.ஏ., ஒதுக்கி உள்ளது.
இந்த நிதி சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் வாயிலாக மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
***