/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை கொட்டினால் ரூ.25,000 அபராதம்: நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
/
குப்பை கொட்டினால் ரூ.25,000 அபராதம்: நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
குப்பை கொட்டினால் ரூ.25,000 அபராதம்: நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
குப்பை கொட்டினால் ரூ.25,000 அபராதம்: நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
ADDED : ஏப் 11, 2025 06:29 AM

சென்னை : கட்டுமான கழிவை முறையாக கையாள வேண்டும்; விதிகளை மீறி கண்ட இடங்களில் கொட்டினால், 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, கட்டுமான நிறுவனங்களுக்கு, சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில், கட்டுமான மற்றும் இடிபாடு கழிவு மேலாண்மை குறித்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வழிகாட்டுதல் வரும், 21ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இது தொடர்பாக, கட்டுமான நிறுவனங்களுக்கு, மாநகராட்சி அனுப்பியுள்ள கடிதம்: மாநகராட்சியில், 1,000 கிலோவுக்கு குறைவாக கட்டட கழிவு இருந்தால், 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், மாநகராட்சியே கட்டணமின்றி அகற்றும்.
அதே நேரம், 1,000 கிலோ முதல் 20,000 கிலோ வரை உருவாக்குபவர்கள், தாங்களாகவே அகற்றி கொள்ளலாம். மாநகராட்சி அகற்ற வேண்டும் என்றால், 1,000 கிலோவுக்கு, 2,500 ரூபாய் கட்டணம் பெறப்படும். மேலும், 20,000 கிலோவுக்கு மேல் உருவாக்குபவர்கள் தாங்களாகவே அகற்ற வேண்டும்.
மேலும், கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்குளில், 1,000 கிலோவுக்கு, 800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இவற்றை பின்பற்றாமல் பொது இடங்களில் கொட்டினால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், 6,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கட்டடம் மற்றும் இடிபாட்டு இடங்களில,் இவற்றை மீறுபவர்களுக்கு, தினமும், 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அனைத்து கட்டுமான நிறுவனங்களும், மாநகராட்சியின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.