தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரயில் பயணியரிடம் ரூ.25.45 லட்சம் பறிமுதல்

 ரயில் பயணியரிடம் ரூ.25.45 லட்சம் பறிமுதல்

 ரயில் பயணியரிடம் ரூ.25.45 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 15, 2026 10:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 10:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மதுசூதனரெட்டி தலைமையில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர், நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து சென்ட்ரலுக்கு விரைவு ரயில் வந்தது. அதில் இறங்கி வந்த பயணியரை கண்காணித்தபோது, ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவரை தடுத்து நிறுத்தி, அவரது பைகளை சோதித்தபோது, 23.50 லட்சம் ரூபாய் இருந்தது. ஆனால், இப்பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை.

விசாரணையில், சென்னையைச் சேர்ந்த கஜானன், 42 என்பதும், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்ட்ரலுக்கு ரயிலில் பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வருமானவரித்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல, பெரம்பூர் ரயில் நிலையத்தில், உரிய ஆவணமின்றி எடுத்து வந்த 1.95 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இவர், சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஜசீரம் என தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us