தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆவணமின்றி ரூ.30 லட்சம் :அண்ணா நகரில் பறிமுதல்

 ஆவணமின்றி ரூ.30 லட்சம் :அண்ணா நகரில் பறிமுதல்

 ஆவணமின்றி ரூ.30 லட்சம் :அண்ணா நகரில் பறிமுதல்


ADDED : ஏப் 07, 2026 07:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 07:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா நகர்: உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட தனியார் நிறுவனத்தின் சம்பள பணம், 30 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அண்ணா நகர், சாந்தி காலனி, நான்காவது அவென்யூவில், தேர்தல் பறக்கும் படையினர் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 'டொயோட்டா' காரை நிறுத்தி சோதித்தனர்.

அதில், உரிய ஆவணமின்றி, 30 லட்சம் ரூபாய் எடுத்து சென்றது தெரிந்தது. காரில் அண்ணா நகர், நான்காவது அவென்யூவில் உள்ள தேவ் ஆட்டோ மொபைல்ஸ் என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஜேஸ்டின், 48, இமானுவேல் பாலசிங் ஆகியோரிடம் விசாரிக்கப்பட்டது.

நிறுவன ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட சம்பளத் தொகை என தெரிந்தது. இருப்பினும் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்டதால், பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் அலுவலகத்தின் வாயிலாக, வரிமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us