/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உரிய ஆவணம் இல்லாத ரூ.30 லட்சம் பிடிபட்டது
/
உரிய ஆவணம் இல்லாத ரூ.30 லட்சம் பிடிபட்டது
ADDED : மார் 14, 2025 12:17 AM
சென்னை,கொத்தவால்சாவடி போலீசார், நேற்று முன்தினம் இரவு, நாராயண முதலி தெரு சந்திப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியே டூ - வீலரில் வந்தவரை, போலீசார் மடக்கி விசாரித்தனர். பின், கையில் இருந்த பையை வாங்கி சோதனையிட்ட போது, அதில், 30 லட்சம் ரூபாய் இருந்தது.
விசாரணையில், டூ - வீலரில் வந்தவர், கொத்தவால்சாவடியைச் சேர்ந்த சம்பலால் என்பதும், சவுகார்பேட்டையில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருவதும் தெரிந்தது.
வியாபாரத்திற்காக, 30 லட்சம் ரூபாயை எடுத்து வந்ததாக கூறினார். இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.