/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் மாயம்
/
பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் மாயம்
ADDED : ஜன 26, 2026 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, நாராயணசாமி தெருவைச் சேர்ந்தவர் பர்சானா பேகம், 35. இவர் தாய், மகள், இரண்டு மகனுடன் வசித்து வருகிறார்.
இவர், தனது ஐந்து சவரன் நகையை அடமானம் வைத்து, 4 லட்சம் ரூபாயை, கடந்த 23ம் தேதி இரவு வீட்டிற்கு கொண்டு வந்து, பீரோவில் வைத்துள்ளார்.
இந்நிலையில், பர்சானா பேகம் பணத்தை சரிபார்க்க, நேற்று முன்தினம் பீரோவை திறந்தபோது, பணம் மாயமானது தெரிந்தது.
பீரோவின் பூட்டு உடைக்கப்படாமலேயே பணம் மாயமான நிலையில், இது குறித்து புளியந்தோப்பு போலீசில் பர்சானா பேகம் நேற்று புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

