/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் ரூ.4.50 லட்சம் திருட்டு
/
ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் ரூ.4.50 லட்சம் திருட்டு
ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் ரூ.4.50 லட்சம் திருட்டு
ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் ரூ.4.50 லட்சம் திருட்டு
ADDED : செப் 06, 2025 12:24 AM
சென்னை : கோட்டூர்புரத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் வீட்டில் 4.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமான 'டிட்கோ'வின் வேளாண் இயக்குநராக பணிபுரிபவர் சந்தீப் நந்துாரி, 43. இவர் குடும்பத்துடன், கோட்டூர்புரத்தில் உள்ள கோட்டூர் கார்டனில் வசித்து வருகிறார்.
இவரது மனைவி அத்யாஷா பரிதா நந்துாரி நேற்று முன்தினம் மாலை பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாயில், 4.50 லட்சம் ரூபாய் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.