/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி வடிகால்வாய்களை புதுப்பிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு
/
வேளச்சேரி வடிகால்வாய்களை புதுப்பிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு
வேளச்சேரி வடிகால்வாய்களை புதுப்பிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு
வேளச்சேரி வடிகால்வாய்களை புதுப்பிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு
ADDED : நவ 11, 2025 12:42 AM
வேளச்சேரி: வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு அதிகமுள்ள தெருக்களில், பழைய வடிகால்வாய்களை இடித்துவிட்டு, புதிதாக அமைக்க, 5.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அடையாறு மண்டலம், 176வது வார்டு, வேளச்சேரி, ஏ.ஜி.எஸ்., காலனி, வி.ஓ.சி., நகர் உள்ளிட்ட பகுதிகளில், கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படும்.
இங்குள்ள பழைய வடிகால்வாய், 3 அடி அகலம் கொண்டது. இதில், போதிய கொள்ளளவு நீரை கடத்தும் வசதி இல்லாததால், சில ஆண்டுகளாக வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
இதனால், 3 அடி அகலம் வடிகால்வாய்கள் உள்ள ஏ.ஜி.எஸ்., காலனி 7, 9வது குறுக்கு தெருக்கள், ஸ்ரீனிவாசா நகர் 2வது தெரு.
வி.ஓ.சி., நகர் 3வது பிரதான சாலை, பத்மாவதி நகர் பிரதான சாலை ஆகிய தெருக்களில், 1.7 கி.மீ., நீளம், 5 அடி அகலத்தில், புதிய வடிகால்வாய் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதில் வடியும் வெள்ளம், வீராங்கல் கால்வாயில் சேரும் வகையில் கட்டமைக்கப்பட உள்ளது. பழைய வடிகால்வாயை இடித்துவிட்டு, புதிய வடிகால்வாய் கட்ட, 5.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில் பணி துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.

