/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.54 கோடி நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத அவலம்
/
ரூ.54 கோடி நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத அவலம்
ரூ.54 கோடி நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத அவலம்
ரூ.54 கோடி நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத அவலம்
ADDED : நவ 11, 2024 01:50 AM

தண்டையார்பேட்டை:தண்டையார்பேட்டை, கைலாசபுரம் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக, எந்தவித அடிப்படை கட்டமைப்பு வசதியின்றி, 300க்கும் மேற்பட்டோர் குடிசை, தகர வீடுகள் அமைத்து வாழ்ந்து வந்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 2019ல் புதிதாக 54.13 கோடி ரூபாய் செலவில், தரைத்தளம் 'பார்க்கிங்' வசதியுடன் 14 மாடிகளில், 392 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு, 18 மாதங்களில் பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் ஐந்து லிப்ட்கள், தெருவிளக்குகள், மழைநீர் சேகரிப்பு திட்டம், தார்ச்சாலை, தீயணைப்பான் வசதியும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இக்கட்டடம் முழுவதும் செங்கல் இல்லாமல், கான்கிரீட்டால் கட்டப்பட்டது. லிப்ட், டைல்ஸ், வெஸ்டன் கழிப்றை வசதியுடன், ஒரு வீடு 400 சதுரடியில் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் திறப்பு விழா காணப்படவில்லை.
இது குறித்து, கைலாசபுரம்வாசிகள் கூறியதாவது:
கடந்த 2019ல் குடியிருப்புகள் கட்டும் பணி துவங்கிய நிலையில், 2022ல் பெரும்பாலும் முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு, இரண்டுகளாகியும் இதுவரை குடியிருப்புகள் திறக்கப்படவில்லை.
குடியிருப்பு கட்டுமான பணிகளுக்காக, எங்களை ஆறு ஆண்டுகளுக்கு முன் வெளியேற்றினர். இரண்டு ஆண்டுகளில் கட்டடம் கட்டி தருவதாக தெரிவித்தனர். ஆனால், இதுவரை கட்டடம் திறக்கப்படவில்லை. கூலி வேலை செய்வோர் வசித்து வந்த நிலையில், வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்படுகிறோம். விரைந்து குடியிருப்புகளை திறந்து பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.