/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு கட்டி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி
/
வீடு கட்டி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி
ADDED : ஏப் 28, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி,:வியாசர்பாடி, வி.பி.காலனி, 19வது தெருவை சேர்ந்தவர் ராஜி, 29. இவர், தன் வீட்டை கட்ட இறைவி கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் உரிமையாளரான விக்னேஷ் நரேன், 26, என்பவரிடம், 2023 செப்டம்பரில், 6.18 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், ராஜி பணம் கொடுத்து, ஒன்றரை ஆண்டுகளாகியும், வீட்டை கட்டி கொடுக்காமல் ராஜி ஏமாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து, எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில், ராஜி புகார் அளித்தார். பின், 10வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.