/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடசென்னை வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி: சேகர்பாபு
/
வடசென்னை வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி: சேகர்பாபு
ADDED : டிச 03, 2024 12:50 AM

கொளத்துார்,
வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ், திரு.வி.க. நகர் தொகுதியில் பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே, நெல்வாயல் சாலையில் உள்ள கிளை நுாலகம், துறைமுகம் தொகுதியில் உள்ள கிளை நுாலகம் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறியதாவது:
வட சென்னை வளர்ச்சி திட்டத்தில், 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது 6,000 கோடி ரூபாய்க்கு மேலாக வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார். வடசென்னையில் துவங்கபடவுள்ள பல்வேறு புதிய திட்டங்களை, இன்னும் இரண்டு நாட்களில் முதல்வர் துவங்கி வைக்க உள்ளார்.
கல்விக்கு முக்கியத்துவம் தரும் முதல்வர், வட சென்னையில் உள்ள, 15க்கும் மேற்பட்ட கிளை நுாலகங்களை மேம்படுத்தும் பணியையும், பழுதடைந்த பழைய நுாலகங்களை அகற்றி, புதிதாக கட்டவும் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து பணிகளையும், அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.