/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.67 லட்சம் நில மோசடி முகப்பேர் நபருக்கு 'காப்பு'
/
ரூ.67 லட்சம் நில மோசடி முகப்பேர் நபருக்கு 'காப்பு'
ரூ.67 லட்சம் நில மோசடி முகப்பேர் நபருக்கு 'காப்பு'
ரூ.67 லட்சம் நில மோசடி முகப்பேர் நபருக்கு 'காப்பு'
ADDED : நவ 12, 2025 12:20 AM

ஆவடி: கொளப்பாக்கம், மேக்ஸ்வர்த் நகரைச் சேர்ந்தவர் வித்யா, 36. இவர், ராகுல் என்பவர் வாயிலாக, அதே பகுதியில் 1,500 சதுர அடி நிலம் வாங்க 29.50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். 2019ல் பத்திரப்பதிவு செய்ய செல்லும்போது, அந்த சொத்தில் வில்லங்கம் இருப்பது தெரிந்தது.
வித்யா, பணத்தை திருப்பி கேட்டபோது, அதற்கு பதில், போரூர் அடுத்த மதனந்தபுரம், மாதா நகரில் வேறொரு நிலம் வாங்கி தருவதாக கூறியுள்ளார். அந்த நிலத்திற்கு தியாகு, லலிதா ஆகியோர் நில உரிமையாளர் எனவும் ராகுல் தெரிவித்துள்ளார்.
அந்த நிலத்திற்கு 67.50 லட்சம் ரூபாய் விலை பேசி, மீதமுள்ள 38 லட்சம் ரூபாயை வித்யா கொடுத்துள்ளார். அவரது பெயருக்கு அந்த நிலம் 2019 டிசம்பரில், கிரையம் செய்யப்பட்டது.
அந்த நிலத்தின் நிஜ உரிமையாளர் சுப்புராயிலு என்பவர், தன் நிலத்தை யாருக்கும் விற்கவில்லை எனக்கூறி, வித்யாவுக்கு வக்கீல் 'நோட்டீஸ்' அனுப்பினார்.
இதுகுறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவில், வித்யா புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் ஜெகன்நாதன் தலைமையிலான தனிப்படை போலீசார், போலி ஆவணங்கள் தயாரித்து தந்து, மோசடிக்கு உடந்தையாக இருந்த முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த அருள் பிரகாஷ், 47, என்பவரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
ராகுல், ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

