ADDED : ஏப் 02, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட சிவானந்தா சாலையில், நேற்று மதியம், தேர்தல் பறக்கும் படையினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட, ஏழு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஓட்டுநரிடம் விசாரித்ததில், வங்கிக்கு சொந்தமான பணம் என்பது தெரிந்தது. மாலையில், பணத்திற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம், மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
