/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.8,000 லஞ்சம் மின் ஊழியருக்கு 'காப்பு'
/
ரூ.8,000 லஞ்சம் மின் ஊழியருக்கு 'காப்பு'
ADDED : அக் 30, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம், ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் மோகன். இவர், புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக, அரக்கோணம் கோட்டம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அப்போது, போர்மேன் கிருஷ்ணன் 59, என்பவர், புதிய மின் இணைப்புக்கு, 8,000 ரூபாயை தனக்கு லஞ்சமாக தரவேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, நேற்று ரசாயனம் தடவிய, 8,000 ரூபாயை போர்மேன் கிருஷ்ணனிடம் சற்குணம் கொடுத்தார்.
அப்போது, போலீசார், கிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.