/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகால்வாய்களை சீரமைக்க ரூ.86 கோடி ஒதுக்கீடு
/
வடிகால்வாய்களை சீரமைக்க ரூ.86 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 28, 2025 02:18 AM
சென்னை:சென்னையில் எட்டு மண்டலங்களில், நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தி, மிகவும் சிதிலமடைந்துள்ள வடிகால்வாய்களை புதுப்பிக்க, 86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்துார், அண்ணாநகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில், 57 பகுதிகளில் உள்ள வடிகால்வாய்கள் சிதிலமடைந்து, நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
சமீபத்தில் நடத்திய ஆய்வில், வரும் பருவமழையில் இங்கு வெள்ள பாதிப்பு அதிகரிக்கும் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, 57 பகுதிகளில் உள்ள சிதிலமடைந்த வடிகால்வாய்களை புதுப்பிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக, 86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் மாதம் பணி துவக்கி, பருவமழைக்குமுன் முடிக்கும் வகையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.