sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தாம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு... ரூ.892 கோடி!:அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் மாநகராட்சி

/

தாம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு... ரூ.892 கோடி!:அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் மாநகராட்சி

தாம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு... ரூ.892 கோடி!:அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் மாநகராட்சி

தாம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு... ரூ.892 கோடி!:அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கும் மாநகராட்சி


UPDATED : ஜன 18, 2026 05:11 AM

ADDED : ஜன 18, 2026 05:08 AM

Google News

UPDATED : ஜன 18, 2026 05:11 AM ADDED : ஜன 18, 2026 05:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, 892 கோடி ரூபாய் நிதி கேட்டு, தமிழக அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் என ஐந்து நகராட்சிகள்; பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், திருநீர்மலை என, ஐந்து பேரூராட்சிகளை இணைத்து, 2021ல் தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

மாநகராட்சியில் உள்ள 70 வார்டுகளில், 38 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. 11 வார்டுகளில் பணிகள் நடந்து வருகின்றன. எஞ்சிய, 21 வார்டுகள் அடங்கிய பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், செம்பாக்கம் பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இந்நிலையில், 2024 - 25 சட்டசபை கூட்டத்தொடரில், நகராட்சி நிர்வாகத் துறை மானிய கோரிக்கையின்போது, 'தாம்பரம் மாநகராட்சியில், மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், செம்பாக்கம் பகுதிகளில், 750 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படும்' என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதேநேரத்தில், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை பகுதிகளையும் இணைத்து, திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, மேற்கண்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, 892 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Image 1523135

விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, 892 கோடி ரூபாய் செலவில், திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், 'டெண்டர்' கோரப்பட்டு பணிகள் துவக்கப்படும். - பாலசந்தர், கமிஷனர், தாம்பரம் மாநகராட்சி.








      Dinamalar
      Follow us