/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியவர் வங்கி கணக்கில் இருந்து நுாதனமாக ரூ.9 லட்சம் அபேஸ்
/
முதியவர் வங்கி கணக்கில் இருந்து நுாதனமாக ரூ.9 லட்சம் அபேஸ்
முதியவர் வங்கி கணக்கில் இருந்து நுாதனமாக ரூ.9 லட்சம் அபேஸ்
முதியவர் வங்கி கணக்கில் இருந்து நுாதனமாக ரூ.9 லட்சம் அபேஸ்
ADDED : ஜன 29, 2025 12:26 AM
சேலையூர், சேலையூரை அடுத்த மதுரப்பாக்கம், சரோஜினி நகரை சேர்ந்தவர் சந்திரன், 73. இவரது மொபைல் போன் எண்ணிற்கு, ஜன., 18ம் தேதி, ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் வந்த லிங்க்கை, சந்திரன் தொட்ட நிலையில், அவரது மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி., எண் வந்துள்ளது.
பின், அந்த ஓ.டி.பி., எண், தானாக மற்றொரு இரண்டு மொபைல் எண்களுக்கு பார்வேர்ட் ஆகியுள்ளது.
தொடர்ந்து, சந்திரனின் உஜ்வான் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் பிக்சட் டெபாசிட் கணக்கில் இருந்து, 8.92 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த சந்திரன், வங்கி கணக்கை சோதனை செய்த போது, பீகார், மேற்கு வங்கம், அசாம், ஒடிசா என, ஐந்து வெவ்வேறு கணக்குகளில் இருந்து, நெட் பேங்கிங் வாயிலாக பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து, சேலையூர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் சந்திரன் புகார் அளித்தார். இப்புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.