/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிப்பறை பராமரிப்பிற்கு ரூ.91 லட்சம் ஒதுக்கீடு
/
கழிப்பறை பராமரிப்பிற்கு ரூ.91 லட்சம் ஒதுக்கீடு
ADDED : ஜன 17, 2025 12:26 AM
ஆலந்துார், ஆலந்துார் மண்டலத்தில் உள்ள 156வது வார்டு முதல் 167வது வார்டு வரை, 30 கழிப்பறைகள் உள்ளன.
இதில், ஆண்களுக்கு 81, பெண்களுக்கு 92 உள்ளன. சிறார்களுக்கு, 161 வார்டில் எட்டும், 166ல் ஆறு கழிப்பறைகளும் உள்ளன.
மாற்று திறனாளிகளுக்கு, 10 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டலம் முழுவதும், 41 குளியல் அறைகள் உள்ளன.
மேலும், ஏழு இடங்களில் சிறுநீர் கழிப்பறைகள், உள்ளன. ஆண்களுக்கு 23 மற்றும் பெண்களுக்கு 18 இ கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு, 18 இருக்கைகள் உள்ளன.
இந்நிலையில், மண்டலத்தில் உள்ள பொதுக் கழிப்பறைகள், சிறுநீர் கழிப்பறை, இ- கழிப்பிடம், பயோ கழிப்பறை ஆகியவற்றை ஆறு மாதங்களுக்கு பராமரிக்க, 156 முதல், 159 வார்டுகளுக்கு, 39.18 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதே போல, 160 முதல் 162 வார்டுகளுக்கு, 25.65 லட்சம் ரூபாயும், 164 முதல் 167 வார்டுகளுக்கு 26.10 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்டலம் முழுவதும் பராமரிப்பிற்கன, 90.93 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.