ADDED : மார் 30, 2026 11:17 PM
சென்னை:சென்னையில் வெவ்வேறு இடங்களில், 9.43 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கர்நாடகா மாநிலம், அசோகாபுரம் - சென்ட்ரல் விரைவு ரயில், நேற்று பெரம்பூருக்கு வந்தது. பயணியரின் உடைமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, நுார் முகமது, 42, என்பவரின் உடைமையில் சோதனை செய்தபோது, அதில் 8.39 லட்சம் ரூபாய் கட்டுக்கட்டாக இருந்தது. இதற்கான ஆவணம் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர், தமிழக நகராட்சித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
* அண்ணா நகர் 3வது பிரதான சாலை, அம்பேத்கர் நகர் சந்திப்பில், உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற, 77,000 ரூபாய் பறிமுதல் செய்து, அதேபோல், செனாய் நகர், 'டாஸ்மாக் கடை எண்:450' அருகில், சட்டவிரோதமாக விற்க இருந்த 12,000 மதுபாட்டில்கள், 27,000 ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உரிமம் இல்லாத பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
