/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.10,000 உதவித்தொகை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
/
ரூ.10,000 உதவித்தொகை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ரூ.10,000 உதவித்தொகை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ரூ.10,000 உதவித்தொகை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 24, 2024 12:30 AM
சென்னை, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் வில்சன் தலைமை வகித்தார். தமிழகத்தில், 75 சதவீத பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதம், 1,500 ரூபாய்; கடும் பாதிப்புக்கு உள்ளானோருக்கு, 2,000 ரூபாய் உதவித் தொகையை அரசு வழங்கி வருகிறது.
ஆந்திராவில், சாதாரண மாற்றுத் திறனாளிகளுக்கு, 6,000; 75 சதவீதம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 10,000; கடும் பாதிப்பு உள்ளோருக்கு, 15,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதுபோல், தமிழகத்திலும் வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பணி நேரத்தை, நான்கு மணி நேரமாக குறைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், வி.சி., பொதுச்செயலர் வன்னியரசு உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.