/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழந்தை கடத்தல் வதந்தி வடசென்னையிலும் பீதி
/
குழந்தை கடத்தல் வதந்தி வடசென்னையிலும் பீதி
ADDED : பிப் 28, 2024 12:27 AM
சென்னை, சென்னையில் ஆண் வேடமிட்ட இளம் பெண் ஒருவர் குழந்தைகளை கடத்த முயற்சி செய்வது போன்ற வீடியோ, ஆடியோவை சமூக வலைதளங்களில் மர்மநபர்கள் வெளியிட்டனர்.
இது வதந்தி என்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து இது போன்ற வீடியோ மற்றும் ஆடியோக்கள் வடசென்னை பகுதிகளில் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை திருவொற்றியூர், கங்கா நகரைச் சேர்ந்த 15 வயது மாணவரை ஜன.,31ல் இருந்து காணவில்லை.
மர்ம நபர்கள் இவரை கடத்தி இருக்கலாம் என்ற தகவலும் பரவியது. இதனால், வட சென்னை பகுதியில் பெற்றோரிடம் அச்சம் நிலவுகிறது. காணாமல் போன மாணவரின் தந்தை கூறுகையில், 'எங்கள் மகன் சென்ற சைக்கிள் ஆந்திர மாநிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மகன் ரயிலில் பயணம் செய்தானா என்பது தெரியவில்லை.
போலீசார் 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்கின்றனர். தற்போது, திருப்பதியில் மகனை தேடி வருகிறோம்' என்றார்.

