ADDED : மார் 04, 2026 06:10 AM

சென்னை: எஸ். ஏ., கல்லுாரி ஆண்டு விழாவில், சிறப்பு விருந்தினரான பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், விழா மலரை வெளியிட்டார்.
சென்னையை அடுத்த திருவேற்காடில் எஸ்.ஏ., கலை அறிவியல் கல்லுாரி உள்ளது. கல்லுாரியின் ஆண்டு விழா சமீபத்தில் நடந்தது. விழாவின்போது, நடப்பாண்டில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினரான பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், விழா மலரை வெளியிட்டு மாணவர்களிடம் பேசுகையில், ''கல்லுாரியில் தான் நல்ல உறவுகளும், வாய்ப்புகளும் உருவாகும். அவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தோல்விகளை வெளியில் சொல்ல கூட, வெற்றி தேவையாகிறது. அதனால், உங்கள் வெற்றிக்கு, நீங்கள் தான் பொறுப்பு,'' என்றார்.
நிகழ்ச்சியில், கல்லுாரி இயக்குநர் சாய் சத்யவதி, முதல்வர் மாலதி செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

