sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இளைஞர்களுக்கு இலவச 'ஈஷா யோகா' வகுப்புகள்!

/

இளைஞர்களுக்கு இலவச 'ஈஷா யோகா' வகுப்புகள்!

இளைஞர்களுக்கு இலவச 'ஈஷா யோகா' வகுப்புகள்!

இளைஞர்களுக்கு இலவச 'ஈஷா யோகா' வகுப்புகள்!


UPDATED : ஆக 06, 2024 02:50 PM

ADDED : ஆக 06, 2024 01:32 PM

Google News

UPDATED : ஆக 06, 2024 02:50 PM ADDED : ஆக 06, 2024 01:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈஷா சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை, 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவசமாக ஈஷா யோகா வகுப்புகள் வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஈஷா அறக்கட்டளை மூலம் குறிப்பாக ஈஷா யோக நிகழ்ச்சி என்று வழங்கப்படும் யோக வகுப்புகளில் 'ஷாம்பவி மஹா முத்ரா' எனும் சக்தி வாய்ந்த பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. இந்த யோகப் பயிற்சி மக்களின் உள்நிலை நல்வாழ்விற்காக, தொன்மையான யோக அறிவியலை அடிப்படையாகக் கொண்டு சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதிலும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்த குறிப்பிட்ட ஈஷா யோகா பயிற்சி மூலம் பல்வேறு உடல் மற்றும் மன நலன்களை பெற்றுள்ளனர்.

Image 1304009


வகுப்புகள் நடைபெறும் இடம்


சென்னை - அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், குரோம்பேட்டை

திருப்பூர் - வாலிபாளையம் யூனிவர்சல் தியேட்டர் அருகில் அமைந்துள்ள ஹார்வி குமாரசாமி மண்டபம்

திண்டுக்கல் - திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில், LGB வளாகத்தில் அமைந்துள்ள VGS ஹால்

ஈரோடு - சக்தி சாலையில் அமைந்துள்ள ஒயாசிஸ் ஹோட்டல் ஈஷா ஹால்

மதுரை - ஆரப்பாளையம் மெய்யப்பன் முதல் தெருவில் அமைந்துள்ள ஈஷா யோக மையம்

நாகர்கோவில் - கே.பி.ரோடு செட்டிகுளம் சந்திப்பில் அமைந்துள்ள கிருஷ்ணா மஹால்

கடலூர் - திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஆயிர வைசிய திருமண மண்டபம்

புதுச்சேரி - சாமிப்பிள்ளை தோட்டத்தில் அமைந்துள்ள பாத்திமா மேல்நிலைப் பள்ளி

ஓசூர் - மூக்கண்டப்பள்ளி காந்தி நகர் மெயின் ரோட்டில் உள்ள ஈஷா யோக மையம்

கரூர் - ராம் விலாஸ் நெசவு தொழிற்சாலையில் அமைந்துள்ள நூல் வணிகர்கள் சங்க வளாகம்

கும்பகோணம் - மகாமக குளம் மேற்கு தெருவில் அமைந்துள்ள ராயா ராஜம் மினி ஹால்

நாமக்கல் - கே கே நகரில் அமைந்துள்ள ஈஷா யோக மையம்

திருச்சி - தில்லை நகர் 5-ஆவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ஈஷா யோக மையம்

வேலூர் - டோல்கேட், ராணி மஹாலுக்கு பின்புறம் அமைந்துள்ள முத்தண்ணா நகர் ஈஷா யோக மையம்

ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8.30 மணி வரையிலும் என ஒரு நாளின் இரு வேளைகளில் நடைபெற உள்ளது. இதில் 15 வயது தொடங்கி 25 வயது வரை உள்ள இளைஞர்கள் பங்கேற்க முடியும்.

ஈஷா யோகா பயிற்சி செய்வதற்கு முன்பும், பின்பும் மக்களிடம் உடல் மற்றும் மனதளவில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது குறித்து பல்வேறு ஆய்வுகளை வெவ்வேறு ஆய்வு அமைப்புகள் நடத்தி உள்ளது.

Image 1304010


அதில் குறிப்பாக பெர்த் இஸ்ரேல் மெடிக்கல் சென்டர் மற்றும் ஹார்ட்வர்ட் மெடிக்கல் ஸ்கூல், ஐஐடி டில்லியைச் சேர்ந்த பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை, போர்சுக்கலில் உள்ள ஐரோப்பிய தூக்க ஆராய்ச்சி மையம், அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியானா பல்கலைக்கழகத்தின் மனநலப் பிரிவு, அமெரிக்காவைச் சேர்ந்த பூலே மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு ஆய்வு அமைப்புகள் ஈஷா யோக பயிற்சி மூலம் மனிதர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் முதல் பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தாக்கங்கள் வரை பல்வேறு கோணங்களில் ஆய்வுகளை மேற்கொண்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் பல முக்கியமான ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமாக ஈஷா யோகப் பயிற்சி செய்பவர்களின் மருந்துத் தேவை குறைகிறது, மன அழுத்தம், பதற்றம் ஏற்படுவதில்லை. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா பிரச்சனைகள் குணமாவது, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்திறன் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு பலன்கள் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, எரிச்சல் முதலான பல்வேறு மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகள் 80%-க்கும் மேல் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Image 1304011


மேலும் சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, இருதய நோய் போன்ற நாட்பட்ட நோய்களுக்கும் ஈஷா யோகா நல்ல நிவாரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக உள்நிலையில் தெளிவு, அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவித்து, இளைஞர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி இலக்குகளை அடைந்திட இந்த யோகப் பயிற்சி அற்புத வாய்ப்பாக அமையும்.

இந்த வகுப்பில் இலவசமாக பங்கேற்க விரும்பும் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் isha.co/youth-iyp என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்


சென்னை - அம்பத்தூர் - 9444071818, குரோம்பேட்டை - 9884986855, மேடவாக்கம் - 8925065375, சோழிங்கநல்லூர் - 9650277689

கடலூர் - 9787510151

திண்டுக்கல் - 9003938133

ஈரோடு - 8300015000

ஓசூர் - 9042552947

கரூர் - 8300062000

மதுரை - 9578130349

நாகர்கோவில் - 9443304199

நாமக்கல் - 9443772797

திருப்பூர் - 6369792947

கும்பகோணம் - 9994855594

புதுச்சேரி - 9443277486

திருச்சி - 9629045133

வேலூர் - 9443436560






      Dinamalar
      Follow us