ADDED : டிச 26, 2025 05:25 AM

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள 'மேடை' என்ற அமைப்பின் வளாகத்தில், தசாவதாரத்தின் நிகழ்வுகளையும், கிருஷ்ணனின் லீலைகளையும் பார்வையாளர்களுக்கு கடத்தும் வகையில், குமாரி சஹானாவின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
மார்கழி மாதத்தின் மஹத்துவ மான, 'திருப்பல்லாண்டு' பாடலுக்கு, கஜேந்திர மோட்சத்தை, நாட்டியத்தின் வாயிலாக கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்.
கிருஷ்ணனின் லீலைகளை வர்ணத்தில் வடிவமைத்த சஹானாவின் முத்திரைகள் அனைத்தும், தேர்ந்த நடன கலைஞரை ஞாபகப்படுத்தியது என சொன்னால் அது மிகையல்ல! ஆயர்பாடி கண்ணன் செய்யும் குறும்புகளை, கண் முன்னே கொண்டு வந்து ஆடிய விதம், சிறப்பாக இருந்தது.
சுத்த நிருத்தம் தாளத்திற்கு ஏற்ப, கால் ஜதி ஒலி எழுப்பும் நடனத்தை, தன் குரு ரேவதி ராமச்சந்தி ரன் போல் மேடையில் ஆடி, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெ ற்றார்.
சஹானாவின் பெற்றோர், கணேஷ் ராமகிருஷ்ணன் - ஸ்ரீவித்யா கணேஷ், ஹங்கேரி மாணவியர், தென் கொரிய பேராசிரியைகள் மற்றும் பல வெளிநாட்டவர்களும், சஹானாவின் நடனத்தை கண்டு ரசித்தனர்.
'மேடை' என்ற இளைஞர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு, வளரும் இளம் நாட்டிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதோடு, அவர்களுக்கு புது உற்சாகத்தை தரும் வகையில் செயல்பட்டு வருகிறது.

