/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிய 'ஏசி' மின்சார பஸ்கள் வருகையால் ரூ.2,000 பாஸ் விற்பனை இரு மடங்கானது
/
புதிய 'ஏசி' மின்சார பஸ்கள் வருகையால் ரூ.2,000 பாஸ் விற்பனை இரு மடங்கானது
புதிய 'ஏசி' மின்சார பஸ்கள் வருகையால் ரூ.2,000 பாஸ் விற்பனை இரு மடங்கானது
புதிய 'ஏசி' மின்சார பஸ்கள் வருகையால் ரூ.2,000 பாஸ் விற்பனை இரு மடங்கானது
ADDED : செப் 03, 2025 10:00 AM
சென்னை: 'புதிய மின்சார 'ஏசி' பேருந்துகளின் வருகையால், 2,000 ரூபாய் பாஸ் பெறுவது 100 சதவீதம் அதிகரித்துள்ளது' என, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 50 'ஏசி' பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்நிலையில் புதிதாக 55 'ஏசி' மின்சார பேருந்துகளின் சேவை, கடந்த மாதம் 11ம் தேதி துவங்கப்பட்டது.
இதையடுத்து, 'ஏசி' பேருந்துகளில் பயணியரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இதனால், 'ஏசி' மாநகர பேருந்துகளில் பயணிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட, 2,000 ரூபாய் புதிய மாதாந்திர பாஸ் பெறுவதும் அதிகரித்துள்ளது.
இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 105 'ஏசி' பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் 'ஏசி' பேருந்துகளிலும் பயணிக்க வசதியாக 2,000 ரூபாய் மாதாந்திர பாஸ் வழங்குவது, கடந்த மார்ச் மாதத்தில் துவங்கப் பட்டது.
ஆரம்பத்தில் மாதந்தோறும் 150 பேர் மட்டுமே வாங்கி பயன்படுத்தினர். படிப்படியாக அதிகரித்து, 250 ஆக உயர்ந்தது. புதிய மின்சார 'ஏசி' பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்த பின், இந்த எண்ணிக்கை, 500 ஆக உயர்ந்துள்ளது.
வரும் மாதங்களில் 'ஏசி' பேருந்துகளில் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, பாஸ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.