தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'சாம்சங்' நிறுவனத்தால் தொழில் வளர்ச்சி அதிகரிப்பு

'சாம்சங்' நிறுவனத்தால் தொழில் வளர்ச்சி அதிகரிப்பு

'சாம்சங்' நிறுவனத்தால் தொழில் வளர்ச்சி அதிகரிப்பு

2


UPDATED : ஜூலை 04, 2026 04:40 PM

ADDED : ஜூலை 04, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2026 04:40 PM ADDED : ஜூலை 04, 2026 04:30 PM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:'ஸ்ரீபெரும்புதுாரில் அமைந்துள்ள சாம்சங் நிறுவனம், தங்களை வெறும் பொருட்களை வழங்கும் சப்ளையர்களாக பார்க்காமல், கூட்டு நிறுவனம் போன்றே நடத்துகிறது' என, யுனைடெட் இண்டஸ்ட்ரீஸ் பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர் கீர்த்தி மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:

விவசாயப் பகுதியாக இருந்த ஸ்ரீபெரும்புதுார் தற்போது, இந்தியாவின் மிக முக்கிய தொழில் மையமாக மாறியதற்கு, 'சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ்' உற்பத்தி ஆலை முக்கிய காரணம்.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் இந்த ஆலை, வெறும் ஏற்றுமதியோடு நிற்காமல், உள்ளூர் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் உலகளாவிய வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்துடனான இந்தக் கூட்டாண்மை, எங்களை வெறும் பொருட்களை வழங்கும் சப்ளையர்களாக பார்க்காமல், 13 ஆண்டுகளாக கூட்டு நிறுவனம் போன்றே நடத்துகிறது. இது எங்களை ஒரு வலுவான நிறுவனமாக வளர உதவியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

'விக்னேஷ் பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்' சென்னை பிரிவு மேலாளர் செல்வகுமார் கூறுகையில், ''சாம்சங் நிறுவனத்தினுடன் நாங்கள் 15 ஆண்டுகளாக இணைந்து பணியாற்ற, நிறுவன அணுகுமுறைதான் பலமாக உள்ளது. இது விற்பனையாளர்கள், தங்கள் வணிகத்தை அதிக நம்பிக்கையுடனும், செயல்திறனுடனும் திட்டமிட உதவுகிறது. பொருட்களை வாங்கும் அட்டவணைகள் முதல் டெலிவரி நேரம் வரை முறையான திட்டமிடல் இருப்பது, நம்பிக்கையுடன் முதலீடு செய்ய உதவுகிறது,'' என்றார்.

**

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us