/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணல் கடத்தல்: லாரி பறிமுதல் டிரைவர் தப்பி ஓட்டம்
/
மணல் கடத்தல்: லாரி பறிமுதல் டிரைவர் தப்பி ஓட்டம்
மணல் கடத்தல்: லாரி பறிமுதல் டிரைவர் தப்பி ஓட்டம்
மணல் கடத்தல்: லாரி பறிமுதல் டிரைவர் தப்பி ஓட்டம்
ADDED : நவ 26, 2025 03:06 AM
சென்னை: சட்டவிரோதமாக மணல் கடத்தி வரப்பட்ட டிப்பர் லாரியை பறிமுதல் செய்த, சுங்கவரித்துறை அதிகாரிகள், போலீசில் ஒப்படைத்தனர். தப்பிய லாரி ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோட்டூர்புரம், பொன்னியம்மன் கோவில் அருகே நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் புவியியல் மற்றும் சுங்கவரி அதிகாரி சுபத்ரால் குழுவினர், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியாக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை மடக்கியபோது, டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பினார். சட்டவிரோதமாக, 3 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிந்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி உரிமையாளர் குறித்து விசாரிக்கின்றனர்.

