/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சங்கீத கலா பூஷணம்' விருது வித்வான்களுக்கு கவுரவம்
/
'சங்கீத கலா பூஷணம்' விருது வித்வான்களுக்கு கவுரவம்
'சங்கீத கலா பூஷணம்' விருது வித்வான்களுக்கு கவுரவம்
'சங்கீத கலா பூஷணம்' விருது வித்வான்களுக்கு கவுரவம்
ADDED : ஜன 31, 2026 05:35 AM

சென்னை: சாவித்ரி அறக்கட்டளை சார்பில், மிருதங்கம், வயலின், தவில் வித்வான்களுக்கு, 'சங்கீத கலா பூஷணம்' விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கானா சபாவில், விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. சாவித்ரி அறக்கட்டளையின் நிறுவனர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக சிட்டி யூனியன் வங்கி மேலாண்மை இயக்குநர் காமகோடி, ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்கள், மிருதங்கம் வித்வான்களான மன்னார்குடி ஈஸ்வரன், ராஜாராவ், வயலின் வித்வான்களான வி.வி.சுப்ரமணியம், நாகை முரளிதரன், தவில் வித்வான் ஏ.கே.பழனிவேல் ஆகியோருக்கு, 'சங்கீத கலா பூஷணம்' விருது வழங்கி கவுரவித்தனர். விழாவில், வி.வி.சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.