/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில் மாடவீதிகளில் சாணக்கழிவு, குப்பையால் சுகாதார சீர்கேடு
/
கோவில் மாடவீதிகளில் சாணக்கழிவு, குப்பையால் சுகாதார சீர்கேடு
கோவில் மாடவீதிகளில் சாணக்கழிவு, குப்பையால் சுகாதார சீர்கேடு
கோவில் மாடவீதிகளில் சாணக்கழிவு, குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : பிப் 07, 2024 12:19 AM

நந்தம்பாக்கம், நந்தம்பாக்கம் பெருமாள் கோவில் மாடவீதிகளில் சாணக் கழிவு மற்றும் குப்பை கொட்டப்பட்டு வருவதால் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
சென்னை, நந்தம்பாக்கத்தில், 750 ஆண்டுகள் பழமையான கோதண்டராம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலின் மாடவீதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கு வசிக்கும் சிலர் மாடுகளை வளர்க்கின்றனர்.
அவற்றின் சாணக் கழிவுகள், குப்பை, மாடவீதிகளில் கொட்டப்படுகிறது. இதனால், கோவிலை சுற்றி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுத் தொல்லையாலும் மாடவீதிகளில் வசிக்கும் மக்கள் தவித்து வருகின்றனர்.
அங்கு சுகாதாரமற்ற சூழல் காணப்படுவதால் பகுதிவாசிகள் பல உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மாநகராட்சியினர் குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும். சாணக் கழிவு, குப்பை கொட்ட தேவையான தொட்டிகள் வைக்க வேண்டும்.
அப்பகுதியில் சிறப்பு மருத்துவமுகாம் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
***