/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இணைப்பு சாலையில் குப்பை குவிப்பதால் சுகாதார சீர்கேடு
/
இணைப்பு சாலையில் குப்பை குவிப்பதால் சுகாதார சீர்கேடு
இணைப்பு சாலையில் குப்பை குவிப்பதால் சுகாதார சீர்கேடு
இணைப்பு சாலையில் குப்பை குவிப்பதால் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 10, 2024 08:29 PM
நெசப்பாக்கம்:நெசப்பாக்கம் இணைப்பு சாலையில் குவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் குப்பை மற்றும் கட்டட கழிவுகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
நெசப்பாக்கம் பிரதான சாலையில், தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை குறுகலாக இருப்பதால், இருவழி போக்குவரத்தில் வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவித்தன.
இதற்கு தீர்வு காண, நெசப்பாக்கம், அண்ணா பிரதான சாலை மற்றும் ஏரிக்கரை சாலையை இணைக்கும் வகையில், 300 மீட்டர் நீளத்திற்கும், 60 அடி அகலத்திற்கும், 2.51 கோடி ரூபாய் செலவில், புதிய இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.
இச்சாலை கடந்த 2017 ம் ஆண்டு ஆக., மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இந்த இணைப்பு சாலையின் இருபுறங்கள் மற்றும் நடைபாதையில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, இலவச 'பார்க்கிங்' ஆக பயன்படுத்துகின்றனர்.
இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை இருந்தது.
தற்போது, இச்சாலையோரம் மற்றும் நடைபாதையில் பிளாஸ்டிக் குப்பை மற்றும் கட்டட கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, இணைப்பு சாலையில் உள்ள குப்பையை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.