ADDED : பிப் 04, 2026 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எண்ணுார்: குளத்தில் தவறி விழுந்து, மாநகராட்சி துாய்மை பணியாளர் பலியானார்.
எண்ணுார், அன்னை சிவகாமி நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் குணசேகர், 32. இவர், திருவொற்றியூர் மண்டலம், 12வது வார்டில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளராக பணிபுரிந்தார்.
இவர், எண்ணுார் விரைவு சாலை, அன்னை சிவகாமி நகரில் உள்ள குளத்தில், நேற்று மாலை கால் கழுவுவதற்காக இறங்கி உள்ளார். அப்போது, தவறி விழுந்து நீரில் மூழ்கினார்.
தகவலறிந்த எண்ணுார் போலீசார், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தேடிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

