/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர் பத்மாவிற்கு தபால் தலை வெளியிட்டு கவுரவிப்பு
/
துாய்மை பணியாளர் பத்மாவிற்கு தபால் தலை வெளியிட்டு கவுரவிப்பு
துாய்மை பணியாளர் பத்மாவிற்கு தபால் தலை வெளியிட்டு கவுரவிப்பு
துாய்மை பணியாளர் பத்மாவிற்கு தபால் தலை வெளியிட்டு கவுரவிப்பு
ADDED : ஜன 29, 2026 05:52 AM

சென்னை: சாலையில் கிடந்த 45 சவரன் நகைகளை போலீசிடம் ஒப்படைத்த, துாய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையை பாராட்டி, அஞ்சல்துறை சார்பில் அவரது புகைப்படத்துடன் கூடிய சிறப்பு தபால் தலை வெளியிட்டு கவுரவித்துள்ளது.
திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பத்மா, 48; துாய்மைப் பணியாளர். இவர், 'உர்பேசர்' என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் பணிபுரிந்து வருகிறார்.
இம்மாதம் 11ம் தேதி, தி.நகர், வண்டிப்பாதை பகுதியில் பணியில் இருந்தபோது, சாலையில் 45 சவரன் தங்க நகைகளுடன் கிடந்த பையை கண்டெடுத்து, அதை, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார், நகை உரிமையாளரான பரமேஷ், 46, என்பவரிடம் தந்தனர்.
கீழே கிடந்த நகைகளை நேர்மையாக, காவல் நிலையத்தில் ஒப்படைத்த பத்மாவிற்கு, முதல்வர் ஸ்டாலின், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்; பலரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில், தமிழக அஞ்சல் துறையின் மத்திய கோட்டம், பத்மாவின் நேர்மையை பாராட்டி, அவரது புகைப்படத்துடன் கூடிய சிறப்பு தபால் தலை வெளியிட்டு கவுரப்படுத்தி உள்ளது. மேலும், அவரின் பெயரில் அஞ்சல் வங்கியில் பிரீமியம் கணக்கும் துவக்கப்பட்டது.
தொடர்ந்து, பத்மாவிற்கு, 15 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும் செய்து, அதற்கான கணக்கு புத்தகம், ஆவணத்தை மத்திய அஞ்சல் கோட்ட மூத்த அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் விஷ்ணுராஜ் வழங்கினார்.

