sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு

/

துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு

துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு

துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு


ADDED : அக் 24, 2024 12:34 AM

Google News

ADDED : அக் 24, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம், செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் மாதம், 10,000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்கின்றனர்.

இவர்கள், நாரவாரிக்குப்பம் பேரூராட்சியின் ஜி.என்.டி., சாலை மற்றும் 110க்கும் மேற்பட்ட தெருக்களில், தினமும் துாய்மைப்பணியில் ஈடுபடுகின்றனர்.

இவர்களுக்கு குப்பையை அகற்ற போதிய உபகரணங்கள், வாகனம் ஏதும் இல்லை. இருக்கிற ஓரிரு சைக்கிள் ரிக்ஷா வாகனங்களும் இயக்க முடியாத நிலையில் சேதமடைந்துள்ளன.

இது குறித்து துாய்மை பணியாளர்கள் கேட்கும் போதெல்லாம், பேரூராட்சியின் சுகாதார ஆய்வாளர், அவரது உதவியாளர் ஆகியோர், 'வேலை செய்ய முடியவில்லை என்றால் வீட்டிற்கு செல்லுங்கள்' என, கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த துாய்மை பணியாளர்கள், நேற்று காலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதனால், அனைத்து தெருக்களிலும் குப்பை கழிவுகள் தேங்கின. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.






      Dinamalar
      Follow us