தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஊதிய உயர்வு கோரி துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு கோரி துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு கோரி துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : ஆக 08, 2026 04:37 PM

ADDED : ஆக 08, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2026 04:37 PM ADDED : ஆக 08, 2026 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருங்களத்துார்:ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாம்பரம் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தாம்பரம் மாநகராட்சியில், ஐந்து மண்டலங்கள், 70 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரமாகும் குப்பை அகற்றும் பணி, 'அவர் லேண்ட்' என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

சமீபகாலமாக, இந்நிறுவனம் முறையாக குப்பை அகற்றுவதில்லை; பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி, 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், பெருங்களத்துாரில் உள்ள நான்காவது மண்டல அலுவலகத்தில், நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்களிடம், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.

இதுகுறித்து, துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:

துாய்மை பணிக்கான, 'அவர் லேண்ட்' என்ற ஒப்பந்த நிறுவனம், துாய்மை பணியாளர்களான எங்களுக்க பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., தொகையை முறையாக செலுத்துவதில்லை.

பணியாளர்களுக்கு சட்டப்படி ஊதியம் வழங்காமல், 8,000, 10,000, 13,000 என, ஊதியம் வழங்குகின்றனர். அதற்கான 'பில்' மற்றும் வார விடுப்பு வழங்குவதில்லை.

துாய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை இல்லை. வாகனங்கள் முறையாக பராமரிப்பதில்லை. பல வாகனங்கள் எப்.சி., இல்லாமல் இயங்குகின்றன.

அவசர தேவைக்கு விடுப்பு எடுத்தால், அடுத்த நாள் பணிக்கு சேர்க்கமாட்டோம் என, மிரட்டுகின்றனர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us