ADDED : ஆக 26, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, துாய்மை பணியாளர்கள் ஏழாவது நாளாக நேற்று, ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த துாய்மை பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏழாவது நாளான நேற்று, ரிப்பன் மாளிகை வளாகத்தில், 250க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
