ADDED : பிப் 17, 2024 12:35 AM

சென்னை,சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே, 11 மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், அம்பத்துாரில் சில பகுதிகள், தனியாரிடம் விட, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவற்றை கண்டித்து, மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், துாய்மை பணியாளர்கள் நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:
தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும், தினமும் 725 ரூபாய் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். குப்பை கையாளும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கைவிட வேண்டும்.
பல ஆண்டுகளாக பணியாற்றும் துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.