/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் 10வது நாளாக தொடரும் துாய்மை பணியாளர்கள் போராட்டம்
/
சென்னையில் 10வது நாளாக தொடரும் துாய்மை பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் 10வது நாளாக தொடரும் துாய்மை பணியாளர்கள் போராட்டம்
சென்னையில் 10வது நாளாக தொடரும் துாய்மை பணியாளர்கள் போராட்டம்
ADDED : ஆக 11, 2025 01:44 AM

பிராட்வே,:துாய்மை பணியாளர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில், 10வது நாளில் சீமான் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினார்.
குப்பை சேகரிப்பு பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் பணி நிரந்தரம் செய்யக்கோரியும், துாய்மை பணியாளர்கள் கடந்த 10 நாட்களாக, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், நாம் தமிழர் கட்சி தொழிற்சங்கப் பேரவை சார்பில், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
பின் ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
'ராம்கி' என்ற நிறுவனத்திற்கு ஆண்டிற்கு 2,700 கோடி ரூபாய் அரசு தருகிறது. குப்பை அள்ளுவதை கூட தனியாருக்கு கொடுத்துவிட்டு, அரசுக்கு என்ன வேலை? அரசு சுயமாக என்னதான் செய்யும். கல்வி, போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்டவற்றை தனியாரிடம் கொடுத்துவிட்டு, அரசு மதுபானத்தை மட்டும் தானே விற்கிறது.
12 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்பவர்களை பணி நிரந்தரம் செய்வதில் என்ன இடையூறு உள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின்' ஏன் போராடும் மக்களுடன் வரவில்ல; நகரத்தை சுத்தமாக்க போராடும் மக்களை புறக்கணிப்பது ஏன்?
அ.தி.மு.க., ஆட்சியில் பல மண்டலங்களை, தனியாருக்கு கொடுத்தபோது அதை மாற்றவோம் என்று தானே, ஆட்சிக்கு வந்தீர்கள்?
துாய்மை பணியாளர்களுக்கு தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றுங்கள். துாய்மை பணியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.