/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி மாநில வாலிபாலில் 'சாம்பியன்'
/
சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி மாநில வாலிபாலில் 'சாம்பியன்'
சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி மாநில வாலிபாலில் 'சாம்பியன்'
சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி மாநில வாலிபாலில் 'சாம்பியன்'
ADDED : செப் 09, 2025 12:49 AM

சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி முதலிடத்தை பிடித்தது.
ஸ்ரீமதி நினைவு கோப்பைக்கான மாநில வாலிபால் போட்டி, பெரியமேடு, நேரு விளையாட்டு மைதானத்தில், கடந்த 6ல் துவங்கி, நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது.
பள்ளிகளுக்கு இடையிலான இப்போட்டியில், மாணவர்களில் சென்னையைச் சேர்ந்த செயின்ட் பீட்ஸ், மான்போர்ட், திண்டுக்கல் தேவநாயகி உட்பட ஆறு அணிகள் பங்கேற்றன.
மாணவியரில் சென்னை எஸ்.டி.ஏ.டி., ஆத்துார் பாரதியார் பள்ளி, லேடி சிவசாமி உட்பட ஆறு அணிகள் மோதின.
இரு பாலரிலும், தலா மூன்று பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு அணியும் மற்ற இரண்டு அணிகளுடன் மோதின. 'ரவுண்ட் ராபின்' முறையில் போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும், தலா இரண்டு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
புள்ளிகள் அடிப்படையில், இறுதி போட்டியில் மாணவர் பிரிவில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் அணி, முகப்பேர் வேலம்மாள் அணியுடன் மோதியது.
முடிவில், 25 - 22, 22 - 25, 25 - 19, 18 - 25, 15 - 12 என்ற விறுவிறுப்பான புள்ளி கணக்கில், கடைசி நிமிடங்களில் ரசிகர்களின் மூச்சை அடக்கும் வகையில், செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி பெற்று, 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றியது.
மாணவியரில், சேலம் ஆத்துார் பாரதியார் பள்ளி, 25 - 8, 25 - 23 என்ற புள்ளி கணக்கில் புரசைவாக்கம் டி.இ.எல்.சி., அணியை வீழ்த்தி, முதலிடம் பிடித்தது.