/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சந்தோஷ் கோப்பை கால்பந்து தமிழக வீரர்களுக்கு அழைப்பு
/
சந்தோஷ் கோப்பை கால்பந்து தமிழக வீரர்களுக்கு அழைப்பு
சந்தோஷ் கோப்பை கால்பந்து தமிழக வீரர்களுக்கு அழைப்பு
சந்தோஷ் கோப்பை கால்பந்து தமிழக வீரர்களுக்கு அழைப்பு
ADDED : நவ 23, 2025 04:20 AM
சென்னை: தேசிய சீனியர் சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கான தேர்வு முகாம், வரும் 27ம் தேதி நடக்கிறது.
அகில இந்திய கால்பந்து சங்கம் சார்பில், ஆண்களுக்கான 79வது தேசிய சீனியர் சந்தோஷ் கோப்பைக்கான கால்பந்து போட்டி, ஆந்திரா மாநிலம் அனந்தபூரில், வரும் 17ல் துவங்கி 21ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி உட்பட 16 மாநில அணிகள் பங்கேற்கின்றன. இதில், தமிழக அணிக்கான வீரர்கள் தேர்வு முகாம், தமிழ்நாடு கால்பந்து சங்கம், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வரும் 27ம் தேதி காலை 7:30 மணிக்கு துவங்க உள்ளது.
இதற்காக, தமிழக வீரர்களுக்கு அந்த சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. தேர்வு முகாமில் தகுதி பெறும் வீரர்கள், 30ம் தேதி துவங்க உள்ள பயிற்சி முகாமில் பங்கேற்பர் என, தமிழ்நாடு கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.