/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்
/
சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்
ADDED : ஜூலை 25, 2025 12:23 AM
பம்மல் :பம்மலில், சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க கோரி, அப்பகுதியில் வசிப்போர் நேற்று அச்சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மாநகராட்சி, 7வது வார்டுக்கு உட்பட்ட கலைஞர் சாலை, நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருந்தது. மழை பெய்யும் போது, தண்ணீர் தேங்கி, சேறும், சகதியுமாக சாலை மாறிவிடுகிறது.
அதுபோன்ற நேரங்களில், அவ்வழியாக செல்லும் மாணவர்கள், அப்பகுதியில் வசிப்போர் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சாலையை சீரமைக்க கோரி, சாலையில் உள்ள சேற்றில் நாற்று நடும் போராட்டத்தில், அப்பகுதியில் வசிப்போர் ஈடுபட்டனர்.
இதேபோல், திரிசூலத்தில் சாலையை சீரமைக்க கோரி, நேற்று முன்தினம் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியினர் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.
இச்சாலையில், 'பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. அதே போல், சாலை அமைப்பதற்கு டெண்டரும் விடப்பட்டுள்ளது. பணி முடிந்தவுடன், சாலை அமைக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.