ADDED : நவ 10, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பெரம்பூர், அகரத்தில் உள்ள ஆறுமுகசுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அகரம், பல்லார்டு தெருவில் உள்ள ஸ்ரீவள்ளி தெய்வசேனா சமேத ஸ்ரீஆறுமுக சுவாமி ஆலயத்தில், கந்த சஷ்டி விழாவையொட்டி கடந்த 7 ம்தேதி விளக்கு பூஜையும், சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து சுவாமி திரு உலா நடந்தது.
கடந்த 8 ம்தேதி ஆறுமுக சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகத்தினரால் மதிய விருந்து அளிக்கப்பட்டது.