/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிக்கரணையில் சாஸ்தா திருக்கல்யாண வைபவம்
/
பள்ளிக்கரணையில் சாஸ்தா திருக்கல்யாண வைபவம்
ADDED : டிச 21, 2024 11:59 PM
பள்ளிக்கரணை, தர்மசாஸ்த்ரு பக்த ஜன சத்சங்கமும், ஆஸ்தீக பந்து ஆன்மிக மாத இதழ் இணைந்து நடத்தும், 17ம் ஆண்டு மண்டல பூஜை, சாஸ்தா பிரீதி மற்றும் மகா சாஸ்தா திருக்கல்யாண இரண்டு நாள் வைபவம், பள்ளிக்கரணை, நீலாம்பாள் திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது.
முதல் நாளான நேற்று காலை மகா கணபதி ஹோமம், சுவாமி அய்யயப்பனுக்கு அஷ்டாபிஷேகம், உஷத் பூஜை, மகா சாஸ்தா திருக்கல்யாண வைபவம் துவங்கியது.
மதியம் திருமாங்கல்ய தாரணம், உச்ச பூஜை நடந்தது. திருக்கல்யாணத்தை அரவிந்த் சுப்ரமணியம், விபாவன் மற்றும் குழுவினர் நடத்தினர். வைதீக காரியங்களை கணேச சாஸ்திரிகளும், ஷட் சக்ர ஷேத்ர அலங்காரத்தை கண்ணன் சிவாச்சாரியாரும் நிகழ்த்தினர்.
மாலை சாஸ்தா ஷட் சக்ர ஷேத்ர பூஜை துவங்கியது. பின், பாண்டி மேளத்துடன் படி பூஜை, புஷ்பாபிஷேகம், அர்த்தஜாம பூஜை ஆகியவை நடந்தன.
இன்று ருத்ர பாராயணம், அஷ்டாபிஷேகம், சாஸ்தா ஆவரண பூஜை, 108 சங்காபிஷேகம், சாஸ்தா வரவு பாட்டு ஆகியவை நடக்கின்றன.