/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாத்துக்குடி விலை இரு மடங்கு உயர்வு
/
சாத்துக்குடி விலை இரு மடங்கு உயர்வு
ADDED : மே 21, 2025 12:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியா - பாக்., போர் சூழல் காரணமாக, ஆந்திராவில் இருந்து எல்லையோர மாநிலங்களுக்கு சாத்துக்குடி அனுப்பவது குறைந்தது.
இதனால், கோயம்பேடு சந்தைக்கு சாத்துக்குடி வரத்து அதிகரித்து, கிலோ 32 ரூபாய்க்கு விற்பனையானது.
தற்போது, போர் பதற்றம் நீங்கியதால், எல்லையோர மாநிலங்களுக்கும், ஆந்திராவில் இருந்து சாத்துக்குடி அதிகம் செல்கிறது. கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது.
இதனால், மொத்த விலையில், கிலோ 65 ரூபாய்க்கும், சில்லரையில் கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
***